தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை - அராலிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அராலி ஊடாக சித்தன்கேணிக்குச் செல்லும் 789 வழித்தட தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை பிரதான வீதி ஊடாக அராலி - சித்தன்கேணி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இன்று சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தன்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
பேருந்து அண்ணளவாக 10-15 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை, அராலிக்குச் செல்ல வீதியின் வலது புறமாக திரும்பிய வேளை வயலுக்குள் பாய்ந்துள்ளது. இருப்பினும் பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயலுக்குள் பாய்ந்த பேருந்தை அப்பகுதி மக்களும் பயணிகளும் இணைந்து மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். விபத்து தொடர்பில்
வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து - உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை - அராலிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அராலி ஊடாக சித்தன்கேணிக்குச் செல்லும் 789 வழித்தட தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை பிரதான வீதி ஊடாக அராலி - சித்தன்கேணி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இன்று சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தன்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. பேருந்து அண்ணளவாக 10-15 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை, அராலிக்குச் செல்ல வீதியின் வலது புறமாக திரும்பிய வேளை வயலுக்குள் பாய்ந்துள்ளது. இருப்பினும் பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயலுக்குள் பாய்ந்த பேருந்தை அப்பகுதி மக்களும் பயணிகளும் இணைந்து மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். விபத்து தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.