• Nov 28 2024

கிண்ணியாவில் காலாவதியான மருந்து பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவளைப்பு!

Tamil nila / Jul 25th 2024, 6:58 pm
image

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு தனியார் வைத்தியசாலை களுக்கு எதிராக வழக்கு  தொடரப்பட்டுள்ளதாக திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர்.

குறித்த சுற்றி வளைப்பானது இம் மாதம் 12,18ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா பத்தாயிரம் தண்டப்பணம் விதித்து 10 வருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன். மீண்டும் இக் குற்றத்தை செய்தால் 10 வருட தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற நீதவான் மன்றில் தெரிவித்தார்.

குறித்த சுற்றி வளைப்பானது கிண்ணியா பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா நகர சபை வீதி, கிண்ணியா அல் அக்சா வீதி உள்ளிட்ட வீதிகளில் குறித்த சுற்றி வளைப்பானது மேற் கொள்ளப்பட்டிருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர்  மேலும் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் காலாவதியான மருந்து பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவளைப்பு திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு தனியார் வைத்தியசாலை களுக்கு எதிராக வழக்கு  தொடரப்பட்டுள்ளதாக திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர்.குறித்த சுற்றி வளைப்பானது இம் மாதம் 12,18ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா பத்தாயிரம் தண்டப்பணம் விதித்து 10 வருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன். மீண்டும் இக் குற்றத்தை செய்தால் 10 வருட தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற நீதவான் மன்றில் தெரிவித்தார்.குறித்த சுற்றி வளைப்பானது கிண்ணியா பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா நகர சபை வீதி, கிண்ணியா அல் அக்சா வீதி உள்ளிட்ட வீதிகளில் குறித்த சுற்றி வளைப்பானது மேற் கொள்ளப்பட்டிருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர்  மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement