• Dec 12 2024

நியாயமான விலையில் அரிசி வழங்காமையினால் சிக்கல் - வர்த்தமானியை இரத்து செய்யக் கோரிக்கை!

Chithra / Dec 11th 2024, 9:26 am
image


பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரிசி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. 

அரிசி ஆலை உரிமையாளர்களால் நியாயமான விலையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசி வழங்கப்படாமையினால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். 

அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாடொன்றையே கோரியிருந்தார். 

எனினும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். 

அதேநேரம், அரிசி விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார். 

எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விற்பனை விலை செல்லுபடியாகும் வகையில் வர்த்தமானியொன்றை வெளியிட வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 


நியாயமான விலையில் அரிசி வழங்காமையினால் சிக்கல் - வர்த்தமானியை இரத்து செய்யக் கோரிக்கை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரிசி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரிசி ஆலை உரிமையாளர்களால் நியாயமான விலையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசி வழங்கப்படாமையினால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாடொன்றையே கோரியிருந்தார். எனினும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதேநேரம், அரிசி விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விற்பனை விலை செல்லுபடியாகும் வகையில் வர்த்தமானியொன்றை வெளியிட வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா கோரியுள்ளார்.எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement