முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்வதால், குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந் நிலையில் ஒட்டுசுட்டான் பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பை ஏற்று இன்று நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தமது விற்பனை நிலையங்களினூடாக தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் தமது அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்கு இடர்படும்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இந் நிலையில் ஒட்டுசுட்டன் - கற்சிலைமடுப் பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்திற்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடி சிக்கல் நிலமைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்திற்கு அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி, ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினர் எதிர்நோக்கியுள்ள தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஒட்டுசுட்டானில் பனை, தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்; ரவிகரன் எம்.பி எடுத்த நடவடிக்கை முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்வதால், குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந் நிலையில் ஒட்டுசுட்டான் பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பை ஏற்று இன்று நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தமது விற்பனை நிலையங்களினூடாக தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் தமது அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்கு இடர்படும்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். இந் நிலையில் ஒட்டுசுட்டன் - கற்சிலைமடுப் பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்திற்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடி சிக்கல் நிலமைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்திற்கு அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி, ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினர் எதிர்நோக்கியுள்ள தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.