• Jan 11 2025

இலங்கை ரயில் சேவையில் காணப்படும் சிக்கல்கள் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

Chithra / Dec 29th 2024, 12:27 pm
image

  

ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே ரயில் தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்திடம் தற்போது குறைந்தபட்சம் 50 இயந்திரங்கள் மாத்திரமே இயங்குவதற்கு ஏற்றதாக உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீரான ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு 70 ரயில் இயந்திரங்கள் அவசியப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்களை ரத்து செய்யாமல் அல்லது தாமதமின்றி இயக்க குறைந்தபட்சம் 60 இயந்திரங்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இயங்கும் நிலையில் உள்ள 50 இயந்திரங்களில் பெரும்பாலானவை பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் இயந்திரமொன்று தேவையான அளவிலேயே பாரங்களை சுமந்து செல்ல வேண்டும், ஆனால் அதிகளவான பாரங்களை சுமந்து செல்வதன் காரணமாக பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு இருப்பது கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இயந்திரத்தை சீர்செய்வதற்கு தேவையான உதிரி பாகங்களை தற்போது ரயில்வே திணைக்களம் பெற்று வருவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினையும் இன்றி மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரயில் சேவையில் காணப்படும் சிக்கல்கள் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை   ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே ரயில் தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில்வே திணைக்களத்திடம் தற்போது குறைந்தபட்சம் 50 இயந்திரங்கள் மாத்திரமே இயங்குவதற்கு ஏற்றதாக உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.சீரான ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு 70 ரயில் இயந்திரங்கள் அவசியப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ரயில்களை ரத்து செய்யாமல் அல்லது தாமதமின்றி இயக்க குறைந்தபட்சம் 60 இயந்திரங்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இயங்கும் நிலையில் உள்ள 50 இயந்திரங்களில் பெரும்பாலானவை பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.ரயில் இயந்திரமொன்று தேவையான அளவிலேயே பாரங்களை சுமந்து செல்ல வேண்டும், ஆனால் அதிகளவான பாரங்களை சுமந்து செல்வதன் காரணமாக பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரயில் இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு இருப்பது கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டது.எவ்வாறாயினும், இயந்திரத்தை சீர்செய்வதற்கு தேவையான உதிரி பாகங்களை தற்போது ரயில்வே திணைக்களம் பெற்று வருவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்காலத்தில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினையும் இன்றி மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement