• Sep 22 2024

செவ்விளநீர் உற்பத்தியில் முன்னேற்றம் - தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு...!samugammedia

Anaath / Nov 5th 2023, 9:59 am
image

Advertisement

நாட்டில் செவ்விளநீர் ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையில்  காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக  இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

மேலும் இவ்வாண்டில் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 140 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார். 

மேலும் செவ்விளநீர் உற்பத்தியாக மேலும் நாட்டில் முன்னேற்றமின்றிக் காணப்படுவதாகவும், மண் பரிசோதனையை மேற்கொண்டு செவ்விளநீர் செய்கைக்குப் பொருத்தமான பிரதேசத்தை அடையாளம் கண்டு அப்பிரதேசத்தில் செவ்விளநீர் உற்பத்தி ஏற்றுமதிக் கிராமமாக பெயரிட்டு அவ்வுற்பத்தியை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அங்கிருந்த தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், தற்போது நாட்டில் செவ்விளநீர் உற்பத்திக்குப் பொருத்தமான வகை இனம் காணப்படவில்லை என்பதுடன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே செவ்விளநீர் உற்பத்தி செய்யப்படுகின்றமை விசேடமாகும். எனினும் அதிக சுவையிலான மற்றும் கவர்ச்சி மிக்கதாக குறுகிய காலத்தினுள் விளைச்சலை ஏற்படுத்தக் கூடிய புதிய செவ்விளநீர் வகையை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாரும் அமைச்சர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செவ்விளநீர் உற்பத்தியில் முன்னேற்றம் - தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு.samugammedia நாட்டில் செவ்விளநீர் ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையில்  காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக  இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாண்டில் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 140 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அண்மையில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும் செவ்விளநீர் உற்பத்தியாக மேலும் நாட்டில் முன்னேற்றமின்றிக் காணப்படுவதாகவும், மண் பரிசோதனையை மேற்கொண்டு செவ்விளநீர் செய்கைக்குப் பொருத்தமான பிரதேசத்தை அடையாளம் கண்டு அப்பிரதேசத்தில் செவ்விளநீர் உற்பத்தி ஏற்றுமதிக் கிராமமாக பெயரிட்டு அவ்வுற்பத்தியை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அங்கிருந்த தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், தற்போது நாட்டில் செவ்விளநீர் உற்பத்திக்குப் பொருத்தமான வகை இனம் காணப்படவில்லை என்பதுடன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே செவ்விளநீர் உற்பத்தி செய்யப்படுகின்றமை விசேடமாகும். எனினும் அதிக சுவையிலான மற்றும் கவர்ச்சி மிக்கதாக குறுகிய காலத்தினுள் விளைச்சலை ஏற்படுத்தக் கூடிய புதிய செவ்விளநீர் வகையை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாரும் அமைச்சர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement