கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று(18) மு.ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
கேரதீவு-சங்குப்பிட்டி பாலத்தினூடான கனரக வாகனங்களின் போக்குவரத்து தடை. கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று(18) மு.ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.