பிரபல தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(19) மாலை உயிரிழந்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
அவர் ஒரு தொழிலதிபராக இருந்துவந்த நிலையில் பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், வேறு பல உதவிகளையும் வழங்கி அவர்களது குடும்ப வறுமையை போக்கி பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் பிரபல தொழிலதிபர் கிருபாகரன் காலமானார். பிரபல தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) காலமானார்.உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(19) மாலை உயிரிழந்தார்.நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.அவர் ஒரு தொழிலதிபராக இருந்துவந்த நிலையில் பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், வேறு பல உதவிகளையும் வழங்கி அவர்களது குடும்ப வறுமையை போக்கி பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.