• Nov 19 2024

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைக்காரர்- கம்மன்பில பாராட்டு..!

Sharmi / Nov 19th 2024, 6:36 pm
image

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப்  பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

"இலங்கை தேர்தல் வரலாற்றில் தனித்த அரசியல் கட்சி ஒன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். 

ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை முழுமையாக வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 

நான் மாயாஜால வித்தைக்காரரல்ல என்று ஜனாதிபதி குறிப்பிட்டமை முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெற்று ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளமைக்கு நன்றியும், அரசுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அரசைக் கைப்பற்றுவற்காக நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு தோற்றம் பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை  2025 மார்ச் மாதத்துக்குப் பின்னர் சமர்ப்பிப்பதாக அரசு  குறிப்பிட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தில் இருந்து விலகி பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதா? அல்லது செயற்றிட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்தி  அரசியல் நெருக்கடிகளைத்  தோற்றுவிப்பதா?  என்பதில் ஒன்றை அரசு தீர்மானிக்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது.

நான் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்கின்றேன். எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றேன். கிழமையில் இரண்டு நாட்கள் நீதிமன்றத்துக்குச் செல்வேன். மிகுதி நாட்கள் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன்  எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைக்காரர்- கம்மன்பில பாராட்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப்  பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்."இலங்கை தேர்தல் வரலாற்றில் தனித்த அரசியல் கட்சி ஒன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை முழுமையாக வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். நான் மாயாஜால வித்தைக்காரரல்ல என்று ஜனாதிபதி குறிப்பிட்டமை முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும்.ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெற்று ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளமைக்கு நன்றியும், அரசுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அரசைக் கைப்பற்றுவற்காக நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு தோற்றம் பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினோம்.இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை  2025 மார்ச் மாதத்துக்குப் பின்னர் சமர்ப்பிப்பதாக அரசு  குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தில் இருந்து விலகி பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதா அல்லது செயற்றிட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்தி  அரசியல் நெருக்கடிகளைத்  தோற்றுவிப்பதா  என்பதில் ஒன்றை அரசு தீர்மானிக்க வேண்டும்.உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது.நான் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்கின்றேன். எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றேன். கிழமையில் இரண்டு நாட்கள் நீதிமன்றத்துக்குச் செல்வேன். மிகுதி நாட்கள் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement