• Aug 22 2025

இராணுவ முகாமுக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்! விடுக்கப்பட்ட அழைப்பு

Chithra / Aug 22nd 2025, 11:39 am
image


பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இன்று (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது.


இராணுவ முகாமுக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம் விடுக்கப்பட்ட அழைப்பு பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இன்று (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement