• Apr 22 2025

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Chithra / Apr 18th 2025, 1:30 pm
image


பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

'பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை  'கித்துசர ' அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிரான சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து  இன்று வெள்ளிக்கிழமை  (18)  நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 'பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை  'கித்துசர ' அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிரான சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement