16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் 'ஸ்ரீ தலதா வழிபாடு' இன்று (18) பிற்பகல் 12.30 அளவில் ஆரம்பமாகியது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பாலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து கண்டிக்குப் புறப்பட்ட தொடருந்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது.
கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் விருந்தகத்தை சென்றடைந்தது. அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காகச் சிறப்புத் தமிழ் , சிங்கள புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணையத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு "ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே தொடருந்தில் மீண்டும் கொழும்பு நோக்கித் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் 'ஸ்ரீ தலதா வழிபாடு' இன்று (18) பிற்பகல் 12.30 அளவில் ஆரம்பமாகியது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பாலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து கண்டிக்குப் புறப்பட்ட தொடருந்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது. கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் விருந்தகத்தை சென்றடைந்தது. அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காகச் சிறப்புத் தமிழ் , சிங்கள புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணையத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு "ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே தொடருந்தில் மீண்டும் கொழும்பு நோக்கித் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.