• Sep 20 2024

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாவிட்டால் போராட்டங்கள் தொடரும்! அரசுக்கு எச்சரிக்கை samugammedia

Chithra / May 1st 2023, 9:46 pm
image

Advertisement

பயங்கரவாத தடை சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க தவறும் பட்சத்தில் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இதுதவிர, இந்த விடயம் தொடர்பில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன், ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தாகியுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 1979ஆம் ஆண்டில் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடை சட்டம், மக்களை எந்த வகையிலும் பாதுகாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக பொதுமக்களை ஒடுக்குவதற்காக மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத அடக்குமுறை சட்டமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாவிட்டால் போராட்டங்கள் தொடரும் அரசுக்கு எச்சரிக்கை samugammedia பயங்கரவாத தடை சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க தவறும் பட்சத்தில் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.இதுதவிர, இந்த விடயம் தொடர்பில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன், ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தாகியுள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 1979ஆம் ஆண்டில் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடை சட்டம், மக்களை எந்த வகையிலும் பாதுகாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாறாக பொதுமக்களை ஒடுக்குவதற்காக மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத அடக்குமுறை சட்டமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement