• May 04 2026

விதவை சம்பளத்தை வழங்குங்கள்; ஜனாதிபதி செயலகம் முன்னே போராட்டம்!

shanu / Sep 24th 2025, 5:26 pm
image

விதவை சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை  முன்வைத்து ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


போர் வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


போராட்டகாரர்கள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை  முன்னெடுத்தனர்.  


போராட்டம் தொடங்குவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும் முத்துநகர் விவசாயிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி செயலகம் , பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றசூழல் உருவாகியுள்ளது.

விதவை சம்பளத்தை வழங்குங்கள்; ஜனாதிபதி செயலகம் முன்னே போராட்டம் விதவை சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை  முன்வைத்து ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போர் வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டகாரர்கள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை  முன்னெடுத்தனர்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும் முத்துநகர் விவசாயிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் , பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றசூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement