திருகோணமலை -மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
இதன் போது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு தலா 23 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன
மூதூர் பிரதேச செயலகத்தின் உதவியுடன் விருத்தி வலையமைப்பின் நிதியுதவியுடன் அகம் மனிதாபிமான வள நிலையம், PCCJ அமைப்புக்கள் இணைந்து இவ் மனிதாபிமான உதவியை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், அகம் மனிதாபிமான வள நிலையத்தில் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டித்வா புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான காசோலைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மூதூரில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு காசோலை வழங்கி வைப்பு திருகோணமலை -மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.இதன் போது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு தலா 23 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன மூதூர் பிரதேச செயலகத்தின் உதவியுடன் விருத்தி வலையமைப்பின் நிதியுதவியுடன் அகம் மனிதாபிமான வள நிலையம், PCCJ அமைப்புக்கள் இணைந்து இவ் மனிதாபிமான உதவியை வழங்கியிருந்தனர்.இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், அகம் மனிதாபிமான வள நிலையத்தில் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டித்வா புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான காசோலைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.