• Mar 11 2026

தொடர் போராட்டத்தில் புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள்

Chithra / Dec 31st 2025, 9:48 am
image

 

திருகோணமலை -புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பான இப் போராட்டமானது தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


தமக்கான வருடாந்த கொடுப்பணவுகள் கொடுக்கப்படாமை, மண்ணை குறைந்து விலைக்கு விற்பதை தடுத்தல், இலாபம் ஈட்டும் நிறுவனத்தை நஷ்டத்தை காட்டி தனியாருக்கு விற்பதை தடுத்தல், நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாண்டு சுற்றுலா செல்ல முடியாததால் சுற்றுலாவுக்கு ஒதுக்கிய தொகையை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்,


உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை புல்மோட்டை கனியமணல் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


தொடர் போராட்டத்தில் புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள்  திருகோணமலை -புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பான இப் போராட்டமானது தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான வருடாந்த கொடுப்பணவுகள் கொடுக்கப்படாமை, மண்ணை குறைந்து விலைக்கு விற்பதை தடுத்தல், இலாபம் ஈட்டும் நிறுவனத்தை நஷ்டத்தை காட்டி தனியாருக்கு விற்பதை தடுத்தல், நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாண்டு சுற்றுலா செல்ல முடியாததால் சுற்றுலாவுக்கு ஒதுக்கிய தொகையை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை புல்மோட்டை கனியமணல் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement