• Sep 20 2024

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை அருள்மிகு ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஸ மஹா கும்பாபிஷேகம்!samugammedia

Tamil nila / Jul 5th 2023, 4:48 pm
image

Advertisement

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு காக்காச்சிவட்டை அருள்மிகு ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஸ மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.


ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் கடந்த 01ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.


ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.மகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன.


இன்றைய தினம் காலை விநாயகர் வழிபாடு,புண்ணியாகவாசனம் நடைபெற்று யாகபூஜை மகாபூர்ணாகுதி,தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு வேதபாராயணம் மற்றும் மேளதாள இசையுடன் பக்தர்கள் அரோகரா கோசத்துடன் மஹா தூபி உட்பட பரிபாலன தெய்வங்களின் தூபிகள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.


இதன்போது பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சிவாச்சாரியர்களின் வேதபாராயணம் மூழங்க மூலமூர்த்தியாகிய மாரியம்மனுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.



அதனை தொடர்ந்து எஜமான் அபிசேகம் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு விசேட ஆசியும் வழங்கப்பட்டது.இன்றைய கும்பாபிசேகத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு காக்காச்சிவட்டை அருள்மிகு ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஸ மஹா கும்பாபிஷேகம்samugammedia கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு காக்காச்சிவட்டை அருள்மிகு ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஸ மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் கடந்த 01ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.மகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன.இன்றைய தினம் காலை விநாயகர் வழிபாடு,புண்ணியாகவாசனம் நடைபெற்று யாகபூஜை மகாபூர்ணாகுதி,தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு வேதபாராயணம் மற்றும் மேளதாள இசையுடன் பக்தர்கள் அரோகரா கோசத்துடன் மஹா தூபி உட்பட பரிபாலன தெய்வங்களின் தூபிகள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.இதன்போது பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சிவாச்சாரியர்களின் வேதபாராயணம் மூழங்க மூலமூர்த்தியாகிய மாரியம்மனுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து எஜமான் அபிசேகம் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு விசேட ஆசியும் வழங்கப்பட்டது.இன்றைய கும்பாபிசேகத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement