• Nov 28 2024

யாழில் பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடிகளுக்கு தண்டம்...!

Sharmi / May 7th 2024, 1:07 pm
image

யாழில் வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த  பல்பொருள் அங்காடிகள் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளரிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் 18.03.2024 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை இன்றையதினம்(07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ.லெனின்குமார் குறித்த பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150,000/= தண்டம் விதித்ததுடன் உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடிகளுக்கு தண்டம். யாழில் வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பரிசோதிக்கப்பட்டன.இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த  பல்பொருள் அங்காடிகள் இனங்காணப்பட்டது.இதனையடுத்து குறித்த பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளரிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் 18.03.2024 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் குறித்த வழக்கினை இன்றையதினம்(07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ.லெனின்குமார் குறித்த பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150,000/= தண்டம் விதித்ததுடன் உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement