வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5) தூய இலங்கை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த கதிரை, மேசைகள் பாவனைக்கு உகந்தவகையில் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருதங்கேணி 10வது விஜயபாகு படையணியின் இராணுவத்தினர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் தூய இலங்கை வேலைத்திட்டம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5) தூய இலங்கை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த கதிரை, மேசைகள் பாவனைக்கு உகந்தவகையில் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருதங்கேணி 10வது விஜயபாகு படையணியின் இராணுவத்தினர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.