• Sep 20 2024

ரஷியாவில் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்த வாக்னர் குழுவுக்கு நன்றி தெரிவித்த புதின்! samugammedia

Tamil nila / Jun 27th 2023, 7:57 am
image

Advertisement

ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி, ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

மேலும் தெரிவிக்கையில், ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. 

வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

ரஷியாவில் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்த வாக்னர் குழுவுக்கு நன்றி தெரிவித்த புதின் samugammedia ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துள்ளது.இதன்படி, ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .மேலும் தெரிவிக்கையில், ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

Advertisement

Advertisement

Advertisement