இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் திசைமாறிப் பயணித்தனர் என்று தெரிவித்தபோதும் தமிழகப் பொலிஸார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டனர்.
இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது மீன்பிடி உபகரணங்களோ காணப்படாததோடு இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் காணப்பட்டுள்ளது. அதனால் தமிழகப் பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் அதிக சந்தேகம் கொண்டனர்.
மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தில் கைதான புத்தளம் மீனவர்கள் விளக்கமறியலில் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புத்தளத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் திசைமாறிப் பயணித்தனர் என்று தெரிவித்தபோதும் தமிழகப் பொலிஸார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டனர்.இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது மீன்பிடி உபகரணங்களோ காணப்படாததோடு இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் காணப்பட்டுள்ளது. அதனால் தமிழகப் பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் அதிக சந்தேகம் கொண்டனர்.மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.