• Nov 23 2024

முசலி மக்களுக்கான புத்தளம் - மன்னார் பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டும் - ரிசாட் பதியுதீன் வேண்டுகோள்..!!

Tamil nila / Mar 7th 2024, 8:07 pm
image

இந்த நாடு நாசமாகவென்று எப்போது இந்த நாட்டுக்கு கோட்டபாய ராஜபக்ஸ வந்தாரோ அன்று முசலி மக்களிற்கான மன்னார் புத்தளம் பாதை இழுத்து மூடப்பட்டது என்று நாடாளுமன்றில் தெரிவித்தார் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன்.

இன்று பாராளுமன்றில் நடைபெற்ற வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்

நான் அமைச்சரவையில் இருந்த காலத்தில் இந்தப் பாதையினை பகுதிபகுதியாக செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். இதற்கூடாக முசலிப் பிரதேச மக்கள் பிராயாணம் செய்யக்கூடிய வகையில் திருத்தம் செய்திருந்தோம். கோட்டபாய ஜனாதிபதியாக வந்த கையோடு இப்பாதை இழுத்து மூடப்பட்டது.

யானைகளுக்கு பாதுகாப்பில்லை என்று காரணம் கூறினார்கள். ஆனால் யானைகள் கூட்டம் கூட்டமாக குறுக்கறுத்து செல்லும் இடங்களில் கைவே பாதை அமைத்துள்ளார்கள். வழக்குத்தொடர்ந்தார்கள் இன்று வரை அந்த வழக்கிற்காக நான் நீதிமன்றம் சென்று வருகின்றேன். முசலி மக்கள் 100கிலோ மீற்றர் சுற்றியே பிரயாணம் செய்கின்றார்கள்.

ஒரு இனத்தினை மட்டும் இந்த நாட்டின்  அரசு வஞ்சிக்கின்றது.  பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் இப்படி செய்வீர்களா? மூவின மக்களும் இணைந்துதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். ஆனால் குறித்த ஒரு இனத்தினை மட்டும் தாக்குகின்றார்கள். இது முறையில்லை .

தற்போதய ஜனாதிபதி தேசிய மீளாத்விழாவை கொண்டாட வரும்போது திறக்கப்படும் என்றார்கள் திறக்கப்படவில்லை. புத்தளம் மன்னார் பாதை அந்த மக்களுக்கு திறக்கப்பட வேண்டும். அவர்கள் தமது சொந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்டு துன்பங்களை அனுபவித்தவர்கள் - என்றார்.

முசலி மக்களுக்கான புத்தளம் - மன்னார் பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டும் - ரிசாட் பதியுதீன் வேண்டுகோள். இந்த நாடு நாசமாகவென்று எப்போது இந்த நாட்டுக்கு கோட்டபாய ராஜபக்ஸ வந்தாரோ அன்று முசலி மக்களிற்கான மன்னார் புத்தளம் பாதை இழுத்து மூடப்பட்டது என்று நாடாளுமன்றில் தெரிவித்தார் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன்.இன்று பாராளுமன்றில் நடைபெற்ற வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்நான் அமைச்சரவையில் இருந்த காலத்தில் இந்தப் பாதையினை பகுதிபகுதியாக செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். இதற்கூடாக முசலிப் பிரதேச மக்கள் பிராயாணம் செய்யக்கூடிய வகையில் திருத்தம் செய்திருந்தோம். கோட்டபாய ஜனாதிபதியாக வந்த கையோடு இப்பாதை இழுத்து மூடப்பட்டது.யானைகளுக்கு பாதுகாப்பில்லை என்று காரணம் கூறினார்கள். ஆனால் யானைகள் கூட்டம் கூட்டமாக குறுக்கறுத்து செல்லும் இடங்களில் கைவே பாதை அமைத்துள்ளார்கள். வழக்குத்தொடர்ந்தார்கள் இன்று வரை அந்த வழக்கிற்காக நான் நீதிமன்றம் சென்று வருகின்றேன். முசலி மக்கள் 100கிலோ மீற்றர் சுற்றியே பிரயாணம் செய்கின்றார்கள்.ஒரு இனத்தினை மட்டும் இந்த நாட்டின்  அரசு வஞ்சிக்கின்றது.  பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் இப்படி செய்வீர்களா மூவின மக்களும் இணைந்துதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். ஆனால் குறித்த ஒரு இனத்தினை மட்டும் தாக்குகின்றார்கள். இது முறையில்லை .தற்போதய ஜனாதிபதி தேசிய மீளாத்விழாவை கொண்டாட வரும்போது திறக்கப்படும் என்றார்கள் திறக்கப்படவில்லை. புத்தளம் மன்னார் பாதை அந்த மக்களுக்கு திறக்கப்பட வேண்டும். அவர்கள் தமது சொந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்டு துன்பங்களை அனுபவித்தவர்கள் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement