• Feb 22 2025

பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது..!

Sharmi / Feb 21st 2025, 10:40 am
image

இலங்கையில் மோசடி பிரமிட் திட்ட தரவுத்தளத்தை நிர்வகித்த கயான் விக்ரமதிலகே துபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை(CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கயான் விக்ரமதிலகே இன்றையதினம்(21) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஆகஸ்ட் 2023 இல் இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்களில் ‘OnmaxDT’ அடங்குகின்றது.

குறித்த நிறுவனம் இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் பிரமிட் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை கடந்த 2023 நவம்பர் இல், மோசடி பிரமிட் திட்டத்திற்காக ‘OnmaxDT’ இன் ஐந்து இயக்குநர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது. இலங்கையில் மோசடி பிரமிட் திட்ட தரவுத்தளத்தை நிர்வகித்த கயான் விக்ரமதிலகே துபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை(CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.பொலிஸாரின் கூற்றுப்படி, கயான் விக்ரமதிலகே இன்றையதினம்(21) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஆகஸ்ட் 2023 இல் இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்களில் ‘OnmaxDT’ அடங்குகின்றது.குறித்த நிறுவனம் இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் பிரமிட் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.அதேவேளை கடந்த 2023 நவம்பர் இல், மோசடி பிரமிட் திட்டத்திற்காக ‘OnmaxDT’ இன் ஐந்து இயக்குநர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement