• Sep 19 2024

பிரமிட் வகை திட்டங்கள்; இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 21st 2023, 10:35 am
image

Advertisement

நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது.

நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேற்படி சட்டத்தின் விதிகளுக்கு மாறாக தடைசெய்யப்பட்ட திட்டங்களை செயற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி மேலும் பொது மக்களுக்கு அறிவித்திருந்தது.

பிரமிட் வகை திட்டங்கள்; இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது.நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேற்படி சட்டத்தின் விதிகளுக்கு மாறாக தடைசெய்யப்பட்ட திட்டங்களை செயற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி மேலும் பொது மக்களுக்கு அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement