• May 27 2026

வவுனியா எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் QR மோசடி; மக்கள் குற்றச்சாட்டு

Chithra / Mar 18th 2026, 12:11 pm
image


வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் ஒரு வாரத்திற்காக QR ஜ ஒரே தடவையில் போலியாக நிரப்புவதால் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.


வாரத்தில் மோட்டார் சைக்கிள் 5 லீற்றர், வேன் 40 லீற்றர், மோட்டார் கார்  15 லீற்றர் போன்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. 


வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் சில நேரத்தில் வாராந்த ஒதுக்கிட்டினை விட குறைவாக எரிபொருள் அடித்திருந்தாலும், 

வாரத்திலுள்ள அனைத்து ஒதுக்கிட்டினையும் ஒன்றாக பதிவதால் எரிபொருள் தீர்ந்தவுடன் மீண்டும் எரிபொருள் நிரப்ப முடியாத நிலமை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.


குறிப்பாக மோட்டார் சைக்கிலுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றர் ஆக காணப்படுகின்றது. வாடிக்கையாளர் 2 லீற்றர் எரிபொருள் நிரப்பி QR ஜ வழங்கினால் எரிபொருள் நிலைய ஊழியர்கள் 5 லீற்றரையும் நிரப்பியதாக பதிவினை முன்னெடுக்கின்றனர்.


வாரத்தில் வழங்கப்படும் குறுகிய லீட்டர் எரிபொருளையும் ஒழுங்காக பெற முடியாத நிலமை உருவாகியுள்ளது. 


எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் QR மோசடி; மக்கள் குற்றச்சாட்டு வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் ஒரு வாரத்திற்காக QR ஜ ஒரே தடவையில் போலியாக நிரப்புவதால் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.வாரத்தில் மோட்டார் சைக்கிள் 5 லீற்றர், வேன் 40 லீற்றர், மோட்டார் கார்  15 லீற்றர் போன்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் சில நேரத்தில் வாராந்த ஒதுக்கிட்டினை விட குறைவாக எரிபொருள் அடித்திருந்தாலும், வாரத்திலுள்ள அனைத்து ஒதுக்கிட்டினையும் ஒன்றாக பதிவதால் எரிபொருள் தீர்ந்தவுடன் மீண்டும் எரிபொருள் நிரப்ப முடியாத நிலமை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.குறிப்பாக மோட்டார் சைக்கிலுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றர் ஆக காணப்படுகின்றது. வாடிக்கையாளர் 2 லீற்றர் எரிபொருள் நிரப்பி QR ஜ வழங்கினால் எரிபொருள் நிலைய ஊழியர்கள் 5 லீற்றரையும் நிரப்பியதாக பதிவினை முன்னெடுக்கின்றனர்.வாரத்தில் வழங்கப்படும் குறுகிய லீட்டர் எரிபொருளையும் ஒழுங்காக பெற முடியாத நிலமை உருவாகியுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement