• Jun 02 2026

இலங்கையில் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி? மௌலவி, தேரரின் அதிர்ச்சிச் செயல்

Chithra / Jun 1st 2026, 11:39 am
image

அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான மௌலவி ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இக்குற்றச்சம்பவத்திற்கு ஆதரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி இறக்காமம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவர், கடந்த 09ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரது விளக்கமறியல் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இக்குற்றச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பி ஓடியிருந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். இவரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


பிரதான சந்தேகநபரான இவர், இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மௌலவி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இறக்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.    


இதேவேளை 

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகிரவகந்த பகுதியில்  15 வயதுடைய  சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சகோதரரான தேரரே இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இதன் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி பகிரவகந்த பகுதியில் சந்தேகநபரான தேரர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருக்கும் 25 வயதுடைய தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, இந்த துஷ்பிரயோகச் சம்பவத்திற்கு ஆதாரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் அன்றைய தினமே பகிரவகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தேரரும், பெண்ணும் கடந்த 21ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபரான தேரரை இன்றையதினம் ஜுன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் தலா 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.    

இலங்கையில் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி மௌலவி, தேரரின் அதிர்ச்சிச் செயல் அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான மௌலவி ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இக்குற்றச்சம்பவத்திற்கு ஆதரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி இறக்காமம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அவர், கடந்த 09ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரது விளக்கமறியல் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இக்குற்றச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பி ஓடியிருந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். இவரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரான இவர், இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மௌலவி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இறக்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.    இதேவேளை கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகிரவகந்த பகுதியில்  15 வயதுடைய  சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சகோதரரான தேரரே இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி பகிரவகந்த பகுதியில் சந்தேகநபரான தேரர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருக்கும் 25 வயதுடைய தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, இந்த துஷ்பிரயோகச் சம்பவத்திற்கு ஆதாரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் அன்றைய தினமே பகிரவகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தேரரும், பெண்ணும் கடந்த 21ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபரான தேரரை இன்றையதினம் ஜுன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் தலா 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.    

Advertisement

Advertisement

Advertisement