நாளை மறுதினம் அதாவது 29 ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படும் . இதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்பவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இரத்தினபுரி, காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வட மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மற்றும் வதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
எனவே மழை, பலத்த காற்றும் மின்னல் உள்ளிட்டவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் நாளை மறுதினம் அதாவது 29 ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படும் . இதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்பவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.இரத்தினபுரி, காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வட மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மற்றும் வதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.எனவே மழை, பலத்த காற்றும் மின்னல் உள்ளிட்டவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.