• Sep 20 2024

ராஜபக்ச நிழல் அரசுக்கும் உடன் முடிவுகட்ட வேண்டும் - மக்கள் சந்திப்பில் சஜித் வலியுறுத்து ! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 1:31 pm
image

Advertisement

ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளது. இதற்கும் மக்கள் உடனடியாக முடிவுகட்ட வேண்டும்."



இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.


ஹரிஸ்பத்துவ தொகுதி அக்குரணை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"இந்த நாட்டு மக்களின் மாபெரும் போராட்டத்தாலேயே நாட்டை அழித்த ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட ராஜபக்ச குழுவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இன்றும் நாட்டில் மாற்றமேதும் ஏற்படாதது ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளதாலேயே. ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வர நாம் ஒருபோதும் செயற்படவில்லை. இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த சிலர், அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனச் சொல்லி, தாம் நல்ல பிள்ளைகள் போல் காட்டிக்கொள்ள செயற்படுகின்றனர்" - என்றார்.

ராஜபக்ச நிழல் அரசுக்கும் உடன் முடிவுகட்ட வேண்டும் - மக்கள் சந்திப்பில் சஜித் வலியுறுத்து SamugamMedia ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளது. இதற்கும் மக்கள் உடனடியாக முடிவுகட்ட வேண்டும்."இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.ஹரிஸ்பத்துவ தொகுதி அக்குரணை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"இந்த நாட்டு மக்களின் மாபெரும் போராட்டத்தாலேயே நாட்டை அழித்த ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட ராஜபக்ச குழுவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இன்றும் நாட்டில் மாற்றமேதும் ஏற்படாதது ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் ஒரு ராஜபக்ச நிழல் அரசு உருவாகியுள்ளதாலேயே. ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வர நாம் ஒருபோதும் செயற்படவில்லை. இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த சிலர், அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனச் சொல்லி, தாம் நல்ல பிள்ளைகள் போல் காட்டிக்கொள்ள செயற்படுகின்றனர்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement