• Dec 14 2024

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா- வைரலாகும் புகைப்படங்கள்..!

Tamil nila / Jul 17th 2024, 7:26 pm
image

தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக முன்னணி நாயகனாக கொண்டாடி வருபவர் நடிகர் விஜய். இப்போது இவர் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.



விஜய் தனது கடைசி படமான 69வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் பட வேலைகளுக்கு நடுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்து பேசிய முக்கிய விஷயங்கள் அதிகம் ரீச் ஆனது.



இந்த நிலையில் நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய்யுடன், நடிகை ரம்பா குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர்.



அந்த புகைப்படங்களை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, விஜய் உங்களை பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பது சந்தோஷம் என பதிவிட்டுள்ளார். 

குறிப்பாக தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் நடிகை ரம்பா.  தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் தனது கணவர் இந்திரகுமார் அவர்களுடன் இணைந்து கனடாவில் MagickWoods மற்றும் MagickHome நிறுவனங்களை நடிகை ரம்பா அவர்கள் திறம்பட நடத்தி வருகிறார்.



அத்துடன் MagickHome-Home Interior and Furniture brand, இந்தியாவின் பல்வேறு இடங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இச்சந்திப்பு ரம்பா இந்திரகுமார் அவர்களின் குடும்பத்தாருடன் தளபதியின் நட்புறவை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.



பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா- வைரலாகும் புகைப்படங்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக முன்னணி நாயகனாக கொண்டாடி வருபவர் நடிகர் விஜய். இப்போது இவர் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.அந்தவகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.விஜய் தனது கடைசி படமான 69வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பட வேலைகளுக்கு நடுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்து பேசிய முக்கிய விஷயங்கள் அதிகம் ரீச் ஆனது.இந்த நிலையில் நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய்யுடன், நடிகை ரம்பா குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர்.அந்த புகைப்படங்களை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, விஜய் உங்களை பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பது சந்தோஷம் என பதிவிட்டுள்ளார். குறிப்பாக தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் நடிகை ரம்பா.  தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார்.திருமணத்திற்கு பின் தனது கணவர் இந்திரகுமார் அவர்களுடன் இணைந்து கனடாவில் MagickWoods மற்றும் MagickHome நிறுவனங்களை நடிகை ரம்பா அவர்கள் திறம்பட நடத்தி வருகிறார்.அத்துடன் MagickHome-Home Interior and Furniture brand, இந்தியாவின் பல்வேறு இடங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இச்சந்திப்பு ரம்பா இந்திரகுமார் அவர்களின் குடும்பத்தாருடன் தளபதியின் நட்புறவை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement