• Nov 19 2024

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த ராமேஸ்வரம் மீனவர்கள்..!

Sharmi / Aug 2nd 2024, 11:38 am
image

இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400 க்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து படகு மீனவர்களின் படகு மீது மோதியதில் மீனவரின் படகு மூழ்கியது.

அதிலிருந்து நான்கு மீனவர்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 

அதன்பின் மலைச்சாமி என்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் செயலை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டகாரர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடாத்திய நிலையில் மறியல்  போராட்டம் கைவிடப்பட்டது 

இதனைத் தொடர்ந்து இன்று(02)  ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு தரவும் மேலும் உயிருடன் இருக்கும் இரண்டு மீனவர்களையும் எந்தவிதமான வழக்குகளுமின்றி தாயகம் கொண்டு வர வலியுறுத்தி இன்று முதல் வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த ராமேஸ்வரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400 க்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து படகு மீனவர்களின் படகு மீது மோதியதில் மீனவரின் படகு மூழ்கியது.அதிலிருந்து நான்கு மீனவர்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதன்பின் மலைச்சாமி என்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் செயலை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடாத்திய நிலையில் மறியல்  போராட்டம் கைவிடப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று(02)  ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு தரவும் மேலும் உயிருடன் இருக்கும் இரண்டு மீனவர்களையும் எந்தவிதமான வழக்குகளுமின்றி தாயகம் கொண்டு வர வலியுறுத்தி இன்று முதல் வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement