• Sep 19 2024

ரணில் அமைதியாக இருந்தால் மட்டுமே கௌரமான முறையில் ஓய்வு பெறமுடியும் - எச்சரித்த மொட்டு!

Sharmi / Feb 1st 2023, 12:05 pm
image

Advertisement

நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்காது எஞ்சியுள்ள காலத்தை பிரச்சனை இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தால் கௌரமான முறையில் பதவியில் இருந்து ஓய்வுப் பெறமுடியுமென இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்குமே தவிர, தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மிகுதியாக இருக்கும் பதவி காலத்தில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்காமல் இருந்தால் அவர் கௌரமான முறையில் பதவியில் இருந்து ஓய்வுப் பெறலாம் என்றும் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தோற்றம் பெற்ற அரகலய நாட்டில் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆனால் தற்போது 13 ஆவது திருத்தம் மீண்டும் இனவாத முரண்பாடுகளை சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்குமா என்ற அச்சம் காணப்படுவதாக வீரசுமன வீரசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார்.

ரணில் அமைதியாக இருந்தால் மட்டுமே கௌரமான முறையில் ஓய்வு பெறமுடியும் - எச்சரித்த மொட்டு நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்காது எஞ்சியுள்ள காலத்தை பிரச்சனை இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தால் கௌரமான முறையில் பதவியில் இருந்து ஓய்வுப் பெறமுடியுமென இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்குமே தவிர, தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார். மிகுதியாக இருக்கும் பதவி காலத்தில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்காமல் இருந்தால் அவர் கௌரமான முறையில் பதவியில் இருந்து ஓய்வுப் பெறலாம் என்றும் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தோற்றம் பெற்ற அரகலய நாட்டில் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் தற்போது 13 ஆவது திருத்தம் மீண்டும் இனவாத முரண்பாடுகளை சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்குமா என்ற அச்சம் காணப்படுவதாக வீரசுமன வீரசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement