• Nov 22 2024

ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரிக்க ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் முயற்சி...! சாஹிர் குற்றச்சாட்டு...!

Sharmi / Jul 8th 2024, 7:25 pm
image

ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது எனவும் வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டு வர எதிர்பார்க்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி  நாளை(9)  சுகயீன விடுமுறை போராட்டத்தில்  சகல ஆசிரியர்கள் அதிபர்களும்  போராட தயாராக வேண்டும் என  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பாறை  சாய்ந்தமருது அல் -கமரூன் வித்தியாலயத்தில்  இன்று(9) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்திற்கு 26 மற்றும் 27 போராட்டம் தொடர்பில் ஒன்றினை தெரிவிக்க விரும்புகின்றோம்.

வெற்றி பெற்ற எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கே இவ்வாறான பிரித்தாளும் தந்திரத்தை எம் மத்தியில் திணிப்பதை நாம் அறிவோம்.

எனவே இந்த ஆசிரியர்களது நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து எதிர்காலத்தில் இப்போராட்டம் உக்கிரம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பணமில்லை என்று கூறி கொண்டு நிறைவேற்று தர அரச ஊழியர்களுக்கு அதிகளவில் பணம் ஒதுக்குவதற்கு பணம் இருந்தால் ஏன் ஆசிரியர்களின் சம்பள மிகுதியை வழங்குவதற்கு பணமில்லை என்று கூறுக்கொண்டிருக்கிறீர்கள்.

எனவே ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும் என்றார்.

குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக  இலங்கை ஆசிரியர் சேவை சங்க உப செயலாளர் ஏ.ஆதம்பாவா, இலங்கை ஆசிரியர் சேவை சங்க அம்பாறை மாவட்ட  செயலாளர் எம்.எஸ்.சத்தார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் எஸ்.எம் ஆரிப்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரிக்க ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் முயற்சி. சாஹிர் குற்றச்சாட்டு. ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது எனவும் வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டு வர எதிர்பார்க்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர் தெரிவித்தார்.சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி  நாளை(9)  சுகயீன விடுமுறை போராட்டத்தில்  சகல ஆசிரியர்கள் அதிபர்களும்  போராட தயாராக வேண்டும் என  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அம்பாறை  சாய்ந்தமருது அல் -கமரூன் வித்தியாலயத்தில்  இன்று(9) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த அரசாங்கத்திற்கு 26 மற்றும் 27 போராட்டம் தொடர்பில் ஒன்றினை தெரிவிக்க விரும்புகின்றோம்.வெற்றி பெற்ற எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கே இவ்வாறான பிரித்தாளும் தந்திரத்தை எம் மத்தியில் திணிப்பதை நாம் அறிவோம்.எனவே இந்த ஆசிரியர்களது நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து எதிர்காலத்தில் இப்போராட்டம் உக்கிரம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பணமில்லை என்று கூறி கொண்டு நிறைவேற்று தர அரச ஊழியர்களுக்கு அதிகளவில் பணம் ஒதுக்குவதற்கு பணம் இருந்தால் ஏன் ஆசிரியர்களின் சம்பள மிகுதியை வழங்குவதற்கு பணமில்லை என்று கூறுக்கொண்டிருக்கிறீர்கள்.எனவே ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இந்த அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும் என்றார்.குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக  இலங்கை ஆசிரியர் சேவை சங்க உப செயலாளர் ஏ.ஆதம்பாவா, இலங்கை ஆசிரியர் சேவை சங்க அம்பாறை மாவட்ட  செயலாளர் எம்.எஸ்.சத்தார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் எஸ்.எம் ஆரிப்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement