• Apr 02 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் - ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 19th 2024, 3:51 pm
image

 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுக்காக கடந்த பதினொரு மாதங்களில் 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக வெளியான அறிக்கைகள் உண்மையற்றவை.

முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளத்துக்காக அதிக தொகை செலவிடப்படுகிறது.

கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்துடன் கணக்கீடு தவறானது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் சரியானவை அல்ல என குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் - ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு  முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுக்காக கடந்த பதினொரு மாதங்களில் 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக வெளியான அறிக்கைகள் உண்மையற்றவை.முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.அரச ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளத்துக்காக அதிக தொகை செலவிடப்படுகிறது.கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்துடன் கணக்கீடு தவறானது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.எனவே, அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் சரியானவை அல்ல என குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement