• Dec 19 2024

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரி அறவிடப்படும்! மத்திய வங்கி ஆளுநர்

Chithra / Dec 19th 2024, 4:01 pm
image

 

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இதன்படி, வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்ததுடன், வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்பதற்கு வாகன இறக்குமதி அவசியமானது எனவும் வாகன இறக்குமதி அதிகமாக இருந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரி அறவிடப்படும் மத்திய வங்கி ஆளுநர்  சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.இதன்படி, வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்ததுடன், வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பொருளாதாரத்தை மீட்பதற்கு வாகன இறக்குமதி அவசியமானது எனவும் வாகன இறக்குமதி அதிகமாக இருந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement