• Nov 02 2024

அநுரவின் ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்- அமைச்சர் விஜித ஹேரத் சாடல்!

Tamil nila / Nov 2nd 2024, 6:54 pm
image

Advertisement

"ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய வரப்பிரதாசங்கள் , பாதுகாப்பு எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக எதையும் வழங்க வேண்டியதில்லை. 180 இராணுவத்தினர், படையினர் எல்லாம் எதற்கு? தேவையற்ற விடயங்களை வழங்க வேண்டியதில்லை.

இந்த அரசால் பயணிக்க முடியாது என ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு காண்கின்றார். இதற்கு முன்னரும் அவர் கனவு கண்டார். டொலர் 400 ரூபா வரை அதிகரிக்கும் என்றெல்லாம்கூட கூறினார். இன்று டொலர் பெறுமதி குறைவடைந்துள்ளது. கனவு காணும் உரிமை அவருக்கு உள்ளது. நன்றாகக் கனவு காணட்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் நகைச்சுவைத்தனமான கருத்துகளைக்  கூறி வருகின்றார். அவரின் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.” – என்றார்.

அநுரவின் ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்- அமைச்சர் விஜித ஹேரத் சாடல் "ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-"முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய வரப்பிரதாசங்கள் , பாதுகாப்பு எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக எதையும் வழங்க வேண்டியதில்லை. 180 இராணுவத்தினர், படையினர் எல்லாம் எதற்கு தேவையற்ற விடயங்களை வழங்க வேண்டியதில்லை.இந்த அரசால் பயணிக்க முடியாது என ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு காண்கின்றார். இதற்கு முன்னரும் அவர் கனவு கண்டார். டொலர் 400 ரூபா வரை அதிகரிக்கும் என்றெல்லாம்கூட கூறினார். இன்று டொலர் பெறுமதி குறைவடைந்துள்ளது. கனவு காணும் உரிமை அவருக்கு உள்ளது. நன்றாகக் கனவு காணட்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் நகைச்சுவைத்தனமான கருத்துகளைக்  கூறி வருகின்றார். அவரின் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement