• Sep 22 2024

ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி! வகுக்கப்பட்ட எதிர்கால திட்டம்

Chithra / Aug 18th 2024, 1:21 pm
image

Advertisement

 

ஜப்பானிலிருந்து இந்தியா வரையில் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

'உலகின் தெற்கு நாடுகளின் குரல்' மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுகிறேன்.

உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகள், சீனா எக்ஸிம் வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இரண்டு வருடங்களாக இலங்கை மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையே காரணம் என்பதை இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.

நமது இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட 'நோக்கம்' என்ற அறிக்கையானது, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நமது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை நினைவுபடுத்தும் அதேவேளையில், எதிர்காலத்திலும் நெருங்கிய உறவுகளை பேணுவதற்கான வழியைத் திறந்துள்ளது.

இதனால் பல துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிணைப்பு ஏற்படும். தற்போது விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்.

மின்சாரம், போக்குவரத்து மற்றும் தரை மார்க்க இணைப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய இணக்கம் காணப்பட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி வகுக்கப்பட்ட எதிர்கால திட்டம்  ஜப்பானிலிருந்து இந்தியா வரையில் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.'உலகின் தெற்கு நாடுகளின் குரல்' மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுகிறேன்.உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகள், சீனா எக்ஸிம் வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.இரண்டு வருடங்களாக இலங்கை மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையே காரணம் என்பதை இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.நமது இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட 'நோக்கம்' என்ற அறிக்கையானது, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நமது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை நினைவுபடுத்தும் அதேவேளையில், எதிர்காலத்திலும் நெருங்கிய உறவுகளை பேணுவதற்கான வழியைத் திறந்துள்ளது.இதனால் பல துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிணைப்பு ஏற்படும். தற்போது விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்.மின்சாரம், போக்குவரத்து மற்றும் தரை மார்க்க இணைப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய இணக்கம் காணப்பட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement