• Mar 25 2025

அதானியின் எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தவறிய அரசு - ரணில் வருத்தம்

Chithra / Mar 23rd 2025, 3:35 pm
image


மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

மேலும், இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை தொடர்புடைய பங்குதாரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அனுர அரசாங்கம் முயற்சிப்பதன் பின்னணியில் உள்ள நியாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒரு தடையாக இருக்கும் என்றும் இது குறித்து தான் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார். 

இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட ஆசியாவை நோக்கி உலகளாவிய சக்தி மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை அதைப் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும் என்றும் கூறினார்.

அதானியின் எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தவறிய அரசு - ரணில் வருத்தம் மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்தார்.ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.மேலும், இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை தொடர்புடைய பங்குதாரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அனுர அரசாங்கம் முயற்சிப்பதன் பின்னணியில் உள்ள நியாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலைமை எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒரு தடையாக இருக்கும் என்றும் இது குறித்து தான் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார். இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட ஆசியாவை நோக்கி உலகளாவிய சக்தி மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை அதைப் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement