முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முதலில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அவர் முன்னிலையாக இயலாமை குறித்து அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக திட்டமிடப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.ஊவா மாகாண முதலமைச்சராக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முதலில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.எனினும் அன்றைய தினத்தில் அவர் முன்னிலையாக இயலாமை குறித்து அறிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக திட்டமிடப்பட்டுள்ளார்.