• Sep 17 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்காது- டிலான் பெரேரா சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 14th 2024, 9:40 am
image

Advertisement

ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பட்டப்பகலில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக அரச இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணம், ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகவும், எத்தனை சாக்குபோக்குகள் கூறினாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வது இறுதியானது எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்காது- டிலான் பெரேரா சுட்டிக்காட்டு. ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பட்டப்பகலில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக அரச இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணம், ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகவும், எத்தனை சாக்குபோக்குகள் கூறினாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வது இறுதியானது எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement