ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார்.
கல்முனை ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டில் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ இருந்திருக்கிறார். அவர் நாட்டுக்கு தான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்தாரே அன்றி எமது தமிழ் சமூகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்.
அதாவது 2015 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தீர்வு ஒன்றினை பெற்றுத் தருமாறு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அவரின் காலில் விழுந்து கேட்டபோது இரவோடு இரவாக உடனே செய்து தருகிறேன் என்று கூறி அதை செய்து தரவில்லை.
இது தவிர இன்னும் ஒரு பாரதூரமான விடயம் ஒன்று உள்ளது. எமது இனத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நரித் தந்திரத்தைப் பயன்படுத்தி இரண்டாகப் பிரித்தவர் இந்த ரணில் விக்கிரமசிங்க தான்.
இவருக்கு இன்று ஆண்டவன் ஒரு தண்டனை கொடுத்திருக்கிறான். இந்த தண்டனை தமிழர்களால் முஸ்லிம்களாலோ அவருக்கு வழங்கப்படவில்லை.அது அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை.
அவருடைய இனம் சமூகத்தாலேயே அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது .ஆனால் அது கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த விடயத்திற்கு கடவுள் தான் பதில் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம்; இறைவன் அளித்த தண்டனையே ரணிலின் சிறைத் தண்டனை ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார்.கல்முனை ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டில் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ இருந்திருக்கிறார். அவர் நாட்டுக்கு தான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்தாரே அன்றி எமது தமிழ் சமூகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார். அதாவது 2015 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தீர்வு ஒன்றினை பெற்றுத் தருமாறு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அவரின் காலில் விழுந்து கேட்டபோது இரவோடு இரவாக உடனே செய்து தருகிறேன் என்று கூறி அதை செய்து தரவில்லை.இது தவிர இன்னும் ஒரு பாரதூரமான விடயம் ஒன்று உள்ளது. எமது இனத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நரித் தந்திரத்தைப் பயன்படுத்தி இரண்டாகப் பிரித்தவர் இந்த ரணில் விக்கிரமசிங்க தான். இவருக்கு இன்று ஆண்டவன் ஒரு தண்டனை கொடுத்திருக்கிறான். இந்த தண்டனை தமிழர்களால் முஸ்லிம்களாலோ அவருக்கு வழங்கப்படவில்லை.அது அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை.அவருடைய இனம் சமூகத்தாலேயே அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது .ஆனால் அது கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த விடயத்திற்கு கடவுள் தான் பதில் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.