• Nov 22 2024

திடீரென தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி! விசாரணை ஆரம்பம்

Chithra / Sep 15th 2024, 8:28 am
image


 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை விமானப் படைக்கு  சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி பயணத்தில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து திடீரென தரையிறக்கப்பட்டது.

எனினும் இதன்போது எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உலங்கு வானூர்தியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்

ஒரு மணி நேரத்தின் பின்னர், உலங்கு வானூர்தி மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீரென தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி விசாரணை ஆரம்பம்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கை விமானப் படைக்கு  சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி பயணத்தில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து திடீரென தரையிறக்கப்பட்டது.எனினும் இதன்போது எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.இந்தநிலையில், அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் உலங்கு வானூர்தியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்ஒரு மணி நேரத்தின் பின்னர், உலங்கு வானூர்தி மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement