• Apr 16 2026

உணவுக்கு துள்ளி விளையாடிய எலிகள்; மன்னார் வெதுப்பகம் மீது சுகாதாரதுறை நடவடிக்கை!

shanu / Feb 4th 2026, 10:27 am
image

மன்னாரிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டதுடன் எலிகளின் நடமாட்டமும் காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுழிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரதுறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


மன்னார் பொதுசுகாதர வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகஸ்தருடன்  இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.  


குறித்த வெதுப்பகத்துக்கு உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை, அத்துடன்  வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதல் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதையும் சுகாதார துறையினர் பார்வையிட்டனர். 


அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை, எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை, உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.


இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவுக்கு துள்ளி விளையாடிய எலிகள்; மன்னார் வெதுப்பகம் மீது சுகாதாரதுறை நடவடிக்கை மன்னாரிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டதுடன் எலிகளின் நடமாட்டமும் காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுழிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரதுறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொதுசுகாதர வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகஸ்தருடன்  இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.  குறித்த வெதுப்பகத்துக்கு உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை, அத்துடன்  வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதல் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதையும் சுகாதார துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை, எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை, உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement