• Jan 13 2025

செல்வபுரம் பகுதியில் ரவிகரன் எம்.பி மக்கள் குறைகேள் சந்திப்பு

Chithra / Dec 13th 2024, 4:06 pm
image


முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நேற்றையதினம் (12) நடாத்தியுள்ளார்.

அந்தவகையில் குறித்த குறைகேள் சந்திப்பில் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கிராமத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக வீதிவிளக்குகள் இன்மை, வடிகாலமைப்புகள் சீரின்மை போன்ற பிரச்சினைகள் செல்வபுரம் கிராமத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை கிராம மட்ட அமைப்புகள் தன்னிடம் கையளிக்குமாறும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் உரியவர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


செல்வபுரம் பகுதியில் ரவிகரன் எம்.பி மக்கள் குறைகேள் சந்திப்பு முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நேற்றையதினம் (12) நடாத்தியுள்ளார்.அந்தவகையில் குறித்த குறைகேள் சந்திப்பில் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கிராமத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.குறிப்பாக வீதிவிளக்குகள் இன்மை, வடிகாலமைப்புகள் சீரின்மை போன்ற பிரச்சினைகள் செல்வபுரம் கிராமத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.குறித்த பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை கிராம மட்ட அமைப்புகள் தன்னிடம் கையளிக்குமாறும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் உரியவர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement