• Feb 07 2025

ஆசாத் மௌலானவை கைது செய்ய சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்..! பிள்ளையான் அறிவிப்பு

Chithra / Feb 6th 2025, 1:13 pm
image

ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து  முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள  தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல், நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்?

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்.அவர்களிற்கு  ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும்,ஐஎஸ் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கும் இடையிலான  வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?

நான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.

2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.

ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார்.

ஆசாத் மௌலானவை கைது செய்ய சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார். பிள்ளையான் அறிவிப்பு ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து  முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள  தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார்.உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல், நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்.அவர்களிற்கு  ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும்,ஐஎஸ் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கும் இடையிலான  வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதாநான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement