• Apr 14 2026

நாகதீப விகாரைக்கு உரிமம் மாற்றி தந்தால் தையிட்டி விகாரை காணியின் உரிமத்தை மக்களுக்கு வழங்க தயார்; நாகதீப விகாராதிபதி தெரிவிப்பு!

shanu / Feb 8th 2026, 6:03 pm
image

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில்  உரிம மாற்றுச் செய்து கொடுத்தால் தையிட்டி விகாரை காணியை அந்த காணிகளின் உரிமையாளர்களது பெயருக்கு  வழங்க தயாராக இருப்பதாக நயினாதீவு நாகதீப விகாராதிபதி தெரிவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  


பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய இன்று (8) நயினாதீவு நாகதீப விகாராதிபதியை தாம் நேரில் சென்று சந்தித்து இவ்விடயம் தொடர்பில்  கலந்துரையாடியிருந்தோம்.


இதன்போது தேரரிடம் எழுத்து மூலம் தையிட்டி விகாரைக்குரிய காணியை சட்டவிரோதமாக கட்டப்பட்ட காணிக்கு பதிலாக அதேயளவான காணியை விகாரைக் காணியிலிருந்து காணி உரிமையாளர்களுக்கு உரிமம் மாற்றி எழுதி தரவேண்டும் என்று  காணி உரிமையாளர் சார்பாக கோரியிருந்தோம். 


அதற்கு தேரர், தரமுடியும் ஆனால் சட்ட விரோத விகாரை காணி உரிமையாளர்கள் தங்கள் காணியை நாகதீப விகாரை பெயரில் எழுதி தரவேண்டும் என்றும் கோரினார்.  அதை எழுத்து மூலம் எழுதி தரச்சொன்னார் எழுத்து மூல பதிலுக்கு அதற்கமை கடிதம் எழுதி கொடுத்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நாகதீப விகாரைக்கு உரிமம் மாற்றி தந்தால் தையிட்டி விகாரை காணியின் உரிமத்தை மக்களுக்கு வழங்க தயார்; நாகதீப விகாராதிபதி தெரிவிப்பு சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில்  உரிம மாற்றுச் செய்து கொடுத்தால் தையிட்டி விகாரை காணியை அந்த காணிகளின் உரிமையாளர்களது பெயருக்கு  வழங்க தயாராக இருப்பதாக நயினாதீவு நாகதீப விகாராதிபதி தெரிவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய இன்று (8) நயினாதீவு நாகதீப விகாராதிபதியை தாம் நேரில் சென்று சந்தித்து இவ்விடயம் தொடர்பில்  கலந்துரையாடியிருந்தோம்.இதன்போது தேரரிடம் எழுத்து மூலம் தையிட்டி விகாரைக்குரிய காணியை சட்டவிரோதமாக கட்டப்பட்ட காணிக்கு பதிலாக அதேயளவான காணியை விகாரைக் காணியிலிருந்து காணி உரிமையாளர்களுக்கு உரிமம் மாற்றி எழுதி தரவேண்டும் என்று  காணி உரிமையாளர் சார்பாக கோரியிருந்தோம். அதற்கு தேரர், தரமுடியும் ஆனால் சட்ட விரோத விகாரை காணி உரிமையாளர்கள் தங்கள் காணியை நாகதீப விகாரை பெயரில் எழுதி தரவேண்டும் என்றும் கோரினார்.  அதை எழுத்து மூலம் எழுதி தரச்சொன்னார் எழுத்து மூல பதிலுக்கு அதற்கமை கடிதம் எழுதி கொடுத்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement