நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் காளான்களாக உருவெடுக்கும் கூட்டணிகள் பயனற்றவை, சில கூட்டணிகள் சரிந்து வருகின்றன.
எதிர்வரும் மே தினக் கொண்டாட்டத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வெளிப்படுத்த நாம் தயார்.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 வீதமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் பலமாக இருந்த போது நாடு அபிவிருத்தியடைந்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமாக இருந்த போது நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.
நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டணியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த கருணாநாயக்க, நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின எழுச்சி மூலம் கட்சியின் பலத்தை வெளிப்படுத்தத் தயார். ரவி கருணாநாயக்க தெரிவிப்பு. நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் காளான்களாக உருவெடுக்கும் கூட்டணிகள் பயனற்றவை, சில கூட்டணிகள் சரிந்து வருகின்றன.எதிர்வரும் மே தினக் கொண்டாட்டத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வெளிப்படுத்த நாம் தயார்.அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 வீதமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம்.அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் பலமாக இருந்த போது நாடு அபிவிருத்தியடைந்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமாக இருந்த போது நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டணியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த கருணாநாயக்க, நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்தார்.