• Dec 13 2024

சாரதியின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய பேருந்து: பலர் வைத்தியசாலையில்..!

Chithra / Mar 30th 2024, 6:25 am
image

  

மட்டக்களப்பு -  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சாரதியின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய பேருந்து: பலர் வைத்தியசாலையில்.   மட்டக்களப்பு -  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement