• Jan 14 2025

மதுபோதையில் அட்டகாசம்; கோடாரி தாக்குதலில் மனைவி சாவு..! கணவன் வைத்தியசாலையில்..!

Chithra / Mar 30th 2024, 6:40 am
image

 

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு  இடம்பெற்ற இக் கொடூர சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட  அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன், கணவன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக  அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் அட்டகாசம்; கோடாரி தாக்குதலில் மனைவி சாவு. கணவன் வைத்தியசாலையில்.  திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு  இடம்பெற்ற இக் கொடூர சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே  உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட  அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன், கணவன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக  அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement