பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியால் 1988 மற்றும் 1989 காலத்தில் கொல்லப்பட்ட சகல தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பட்டலந்த சம்பவம், ஏன் உருவானது என்ற பிரச்சினை உள்ளது. 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலத்தில் பயங்கரவாதம் இருந்தது. அதனால் இரு தரப்பிலும் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
கிராம சேவகர்கள், வைத்தியர்கள், பொலிஸார் மிளேட்சத்தனமாக கொல்லப்படட்டனர்.
இந்த வரலாறு மூடப்பட்டிருந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மறுநாளே நினைவுக்கு வர வேண்டிய விடயம் அல்ஜசீராவில் கூறப்பட்டதை தொடர்ந்தே இது நினைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேடியறிந்து அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
பட்டலந்த சித்திரவதை முகாம்கள் உருவானமைக்கான காரணத்தையும் ஆராய வேண்டும் - வலியுறுத்தும் நளின் பண்டார பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். மக்கள் விடுதலை முன்னணியால் 1988 மற்றும் 1989 காலத்தில் கொல்லப்பட்ட சகல தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பட்டலந்த சம்பவம், ஏன் உருவானது என்ற பிரச்சினை உள்ளது. 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலத்தில் பயங்கரவாதம் இருந்தது. அதனால் இரு தரப்பிலும் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர்.கிராம சேவகர்கள், வைத்தியர்கள், பொலிஸார் மிளேட்சத்தனமாக கொல்லப்படட்டனர். இந்த வரலாறு மூடப்பட்டிருந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மறுநாளே நினைவுக்கு வர வேண்டிய விடயம் அல்ஜசீராவில் கூறப்பட்டதை தொடர்ந்தே இது நினைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேடியறிந்து அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.