• May 10 2026

வெள்ளத்தால் இடிந்து விழுந்த புத்தளம் - அநுராதபுரம் வீதியிலுள்ள பாலம் புனரமைப்பு!

shanu / Dec 4th 2025, 2:00 pm
image

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் -அனுராதபுரம் பிரதான வீதியின் 9ஆவது மைல்கல்லில் இடிந்து விழுந்த கொங்கிரீட் பாலத்திற்கு பதிலாக , புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (03) முதல் அந்த வீதியுடனான போக்குவரத்துகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக நிலவ சீரற்ற வானிலை காரணமாக குறித்த பாலம் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, புத்தளம் - அனுராதபுரம் வீதியுடனான அனைத்து போக்குவரத்துக்களும் ஸ்தம்பித்தது.


இந்த நிலையில், புதிய பாலத்தினை அவசரமாக மீளவும் புனரமைப்பதற்காக இராணுவ வீரர்கள், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம், கருவலகஸ்வெவ பிரதேச சபை, கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் ஒருசில பொதுமக்கள் ஆகியோர் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதன்மூலம் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது.


வெள்ளத்தால் இடிந்து விழுந்த புத்தளம் - அநுராதபுரம் வீதியிலுள்ள பாலம் புனரமைப்பு சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் -அனுராதபுரம் பிரதான வீதியின் 9ஆவது மைல்கல்லில் இடிந்து விழுந்த கொங்கிரீட் பாலத்திற்கு பதிலாக , புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (03) முதல் அந்த வீதியுடனான போக்குவரத்துகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நிலவ சீரற்ற வானிலை காரணமாக குறித்த பாலம் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, புத்தளம் - அனுராதபுரம் வீதியுடனான அனைத்து போக்குவரத்துக்களும் ஸ்தம்பித்தது.இந்த நிலையில், புதிய பாலத்தினை அவசரமாக மீளவும் புனரமைப்பதற்காக இராணுவ வீரர்கள், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம், கருவலகஸ்வெவ பிரதேச சபை, கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் ஒருசில பொதுமக்கள் ஆகியோர் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன்மூலம் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement